ரிஷப் பண்ட் X-ஃபேக்டர்ன்னு சொன்னீங்க... இதான் உங்க டொக்கா - இந்தியாவை வருத்தெடுத்த ஆகாஷ் சோப்ரா! 1

ரிஷப் பண்ட்டை இந்திய அணி பயன்படுத்திய விதத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதின இதில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட்

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் வழக்கம் போல குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். சூரியகுமார் யாதவ் இம்முறை பெரிதளவில் சோபிக்கவில்லை. 14 ரண்களுக்கு வெளியேறினார்.

இந்த கட்டத்தில் ரிஷப் பண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். மிடில் ஓவர்களில் இந்தியாவின் இந்தத் திட்டம் சரியாக எடுபடவில்லை. 15 ஓவர் களுக்கு பின்பே பாண்டியா அடிக்க துவங்கினார்.

ஹர்திக் பாண்டியா

இங்கிலாந்து அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடியது. அந்த தருணத்தில் ரிஷப் பண்ட் உள்ளே வந்திருந்தால் ரன்களை கூடுதலாக அடிக்கலாம் என்பதற்காக அவரை பிளேயிங் லெவனில் எடுத்துவந்து சரியாக பயன்படுத்தாமல், ஆறாவது வீரராக களம் இறக்கினர்.

கடைசி ஓவருக்கு முன்பு வந்த அவர் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே விளையாடி ஆறு ரன்கள் அடித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இங்கிலாந்து ஸ்பின்னர்கள் ரஷீத் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் ஏழு ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். இவர்களின் 42 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே இந்திய அணி அடிக்க முடிந்ததால் இதனை விமர்சித்து ரிஷப் பண்ட்டை பயன்படுத்திய விதத்தையும் விமர்சித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

ரிஷப் பண்ட்

அவர் கூறுகையில், “ரிஷப் பண்ட் எக்ஸ்-ஃபேக்டர் என்று பயன்படுத்தி விளையாடினார்கள். அவரை வைத்து விளையாடும் பொழுது எந்த கட்டத்தில் இறக்கி விட வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். ஏழு ஸ்பின் ஓவர்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மைதானத்தின் இரு பக்கங்களிலும் குறைவான பவுண்டரி தூரமே இருக்கிறது. அப்படி ஒரு தருணத்தில் இந்திய அணி பத்துக்கும் குறைவாக ரன்கள் அடித்தது பெருத்த பின்னடைவாக அமைந்திருக்கிறது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *