சஞ்சு சாம்சனிற்கு இந்த இடத்தை கொடுங்கள்... புது ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்; ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார் !! 1
சஞ்சு சாம்சனிற்கு இந்த இடத்தை கொடுங்கள்… புது ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்; ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார்

முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்திய அணி

 

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தியதை போன்று, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சஞ்சு சாம்சனிற்கு இந்த இடத்தை கொடுங்கள்... புது ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்; ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார் !! 2

இந்தநிலையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவானை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்துள்ளார். சஞ்சு சாம்சனை ஆறாவது இடத்தில் களமிறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் வலுப்பெறும் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சனிற்கு இந்த இடத்தை கொடுங்கள்... புது ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்; ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார் !! 3

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்.

Leave a comment

Your email address will not be published.