நீங்க இப்படியே பண்ணீட்டு இருந்தா இவரோட கிரிக்கெட் வாழ்க்கை என்னாகுமோ ? - ஆகாஷ் சோப்ரா ! 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் மனிஷ் பாண்டே இடம் பெறாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  சென்னை சேப்பாக்கத்தில் ந்டைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது. இதையடுத்து 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானத்தில் நடக்கவுள்ளது. நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

நீங்க இப்படியே பண்ணீட்டு இருந்தா இவரோட கிரிக்கெட் வாழ்க்கை என்னாகுமோ ? - ஆகாஷ் சோப்ரா ! 2

இந்த 4 டெஸ்ட் தொடரும் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகியோர் முதன் முறையாக சர்வதேச அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.

நீங்க இப்படியே பண்ணீட்டு இருந்தா இவரோட கிரிக்கெட் வாழ்க்கை என்னாகுமோ ? - ஆகாஷ் சோப்ரா ! 3

இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கடந்த ஐபிஎல்லின் போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தற்போது மீண்டும் டி20 அணியில் இணைந்திருக்கிறார். இந்திய அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா “சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகியோர் இடம்பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் டி20 வீரரான மணிஷ் பாண்டே இடம்பெறாதது வருத்தமாக இருக்கிறது. இந்திய டி20 அணியை அறிவிக்கும்போதெல்லாம் மனிஷ் பாண்டேவின் பெயர் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை பாண்டேவின் பெயர் இடம்பெறவில்லை.  இது அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆபத்தாக அமையும்” என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியாக பேசியிருக்கிறார்.

நீங்க இப்படியே பண்ணீட்டு இருந்தா இவரோட கிரிக்கெட் வாழ்க்கை என்னாகுமோ ? - ஆகாஷ் சோப்ரா ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *