ஜடேஜாவை தொடர்ந்து கேப்டனனும் காயம் ! 2வது போட்டியில் விளையாடுவது சந்தேகம் ! ரசிகர்கள் கவலை !! 1

ஜடேஜாவை தொடர்ந்து கேப்டனனும் காயம் ! 2வது போட்டியில் விளையாடுவது சந்தேகம் ! ரசிகர்கள் கவலை !!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்குமுன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணி இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்துவிட்டது.

2வது டி20 போட்டி ஞாயிற்றுகிழமை 6ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்கு இடமாகயிருக்கிறது. முதல் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் யார் ? என்பது பெரும் சிக்கலை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஜடேஜாவை தொடர்ந்து கேப்டனனும் காயம் ! 2வது போட்டியில் விளையாடுவது சந்தேகம் ! ரசிகர்கள் கவலை !! 2

முதல் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது இடுப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த காயத்தை முதல் போட்டி முடிந்தவுடன் பரிசோதனை செய்து பார்த்ததில் ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதேபோல்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் காயம் அடைந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் விலகி இருப்பது வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜடேஜாவை தொடர்ந்து கேப்டனனும் காயம் ! 2வது போட்டியில் விளையாடுவது சந்தேகம் ! ரசிகர்கள் கவலை !! 3

இதுகுறித்து ஆரோன் பின்ச் கூறுகையில் “இடுப்பில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த போட்டி முழுவதும் நான் ஆடியதால் சற்று அதிகமாகத்தான் காயம் ஆகிவிட்டது என்று கூறலாம். சனிக்கிழமை மாலை ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நாளைய போட்டியில் ஆட முடியுமா என்பது குறித்து தெரிந்து விடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றாக ஆடி ஆடிக் கொண்டிருக்கும் ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெறவேண்டிய போட்டியில் விளையாடமல் இருப்பது இந்திய அணிக்கு நற்செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *