வீடியோ : காட்டடி ஏபிடி!! 111மீ சிக்சர்! சென்னை பவுலர்ஸ் கபலீகரம் 1
சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது
ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் போடப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு மனன் வோராவும், டெல்லி அணியில் ஷமி நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.வீடியோ : காட்டடி ஏபிடி!! 111மீ சிக்சர்! சென்னை பவுலர்ஸ் கபலீகரம் 2

வீடியோ : காட்டடி ஏபிடி!! 111மீ சிக்சர்! சென்னை பவுலர்ஸ் கபலீகரம் 3
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. எம் எஸ் டோனி, 6. ரவிந்திர ஜடேஜா, 7. வெய்ன் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. சர்துல் தாகூர், 11. இம்ரான் தாஹிர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. குயின்டான் டி காக், 2. விராட் கோலி, 3. டி வில்லியர்ஸ், 4. மந்தீப் சிங், 5. கோரி ஆண்டர்சன், 6.கொலின் டி கிரான்ட்ஹோம், 7. வாஷிங்டன் சுந்தர், 8. பவன் நெகி, 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி 19 இன்னிங்ஸ்களில் 706 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 44.13, அதிகபட்சம் 73. இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே கேப்டன் தோனி 22 இன்னிங்ஸ்களில் 608 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 32.00, அதிகபட்சம் 70 நாட்-அவுட். இரு அரைசதங்கள் எடுத்துள்ளார்.

இப்போட்டியின் மூலம் விராட் கோலி தனது 100-ஆவது டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இந்த மைல்கல்லை எட்டும் 8-ஆவது வீரர் ஆவார். 244 போட்டிகளுடன் தோனி முதலிடத்திலும், 170 போட்டிகளுடன் கம்பீர் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *