இந்திய கேப்டன் கோஹ்லி மிக சிறந்த கிரிக்கெட் வீரர்; டிவில்லியர்ஸ் புகழாரம் !! 1
It seems that the World Cup has moved down on the bucket list of AB de Villiers, after the South African batsman said that winning the coveted trophy is not his ultimate dream anymore.

இந்திய கேப்டன் கோஹ்லி மிக சிறந்த கிரிக்கெட் வீரர்; டிவில்லியர்ஸ் புகழாரம்

விராட் கோஹ்லி கிரிக்கெட் உலகின் தலை சிறந்த கேப்டன் என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், குயின்டான் டி காக், மெக்கல்லம் போன்ற தலைசிறந்த அதிரடி ஆட்ட நாயகர்கள் உள்ளனர்.

இந்திய கேப்டன் கோஹ்லி மிக சிறந்த கிரிக்கெட் வீரர்; டிவில்லியர்ஸ் புகழாரம் !! 2

முன்னணி வீரர்கள் இருந்தாலும் ஆர்சிபி ஐந்து போட்டியில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் 360 டிகிரி வீரரான டி வில்லியர்ஸ் முதல் நான்கு ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆனால் டெல்லிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். அவுட்டாகாமல் 39 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் தொடரில் அனுபவ வீரர்கள் மட்டும்தான் சிறப்பாக விளயைாட முடியும் என்று நான் கூறமாட்டேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இந்திய கேப்டன் கோஹ்லி மிக சிறந்த கிரிக்கெட் வீரர்; டிவில்லியர்ஸ் புகழாரம் !! 3
It seems that the World Cup has moved down on the bucket list of AB de Villiers, after the South African batsman said that winning the coveted trophy is not his ultimate dream anymore.

இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘கடந்த ஐந்தாண்டாக நான் பார்த்து வருகிறேன், ஏராளமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஜொலித்துள்ளார்கள். இளம் வீரர்கள் பயமின்றி விளையாடி வருவதை நான் பார்க்கிறேன். ஆகவே, இதனமூலம் சில வீரர்கள் சர்வதேக அணிக்கு வந்தால் அது என்னை ஆச்சர்யப்படுத்தாது.

அனுபவ வீரர்கள் மட்டும்தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்று நான் சொல்லமாட்டேன். இதுவரை நாம் பாதி தொடரைக்கூட தாண்டவில்லை. ஆகவே, ஏராளமான இளம் வீரர்கள் திறமையை வெளிக்காட்ட நேரம் உள்ளது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.