கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்பினார் டி வில்லியர்ஸ் 1
Britain Cricket - South Africa Press Conference - The Oval - June 10, 2017 South Africa's AB de Villiers during the press conference Action Images via Reuters / John Sibley Livepic EDITORIAL USE ONLY.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: அம்லா, மார்க்ராம் (கேப்டன்), டுமினி, கயா ஜோண்டோ, ஏ.பி டி வில்லியர்ஸ்ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெஹர்டைன் அல்லது பெலக்வாயோ, ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர்.

இந்திய – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அ‌பார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, நேற்று மூன்றாவது போட்டியில் விளையாடியது. கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்பினார் டி வில்லியர்ஸ் 2கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராத் கோலியும், ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். தவான் 63 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது டுமினி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் களம் இறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராத் கோலி 159 பந்துகளில் 160 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் இது அவரது 34 வது சதம் ஆகும். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் சேர்த்தது. Cricket, Virat Kohli, India, South Africa,

பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 40 ஓவரில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டுமினி மட்டும் நிலைத்து நின்று 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் யுஸ்வேந்திர சேஹல் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்பினார் டி வில்லியர்ஸ் 3
160 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் 6 ‌போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 – 0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *