இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “நீங்கள் இனிமேலும் கிங்கோலி என்ற அடைமொழியை தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம். அடுத்த முறை எதிர்காலத்தில், இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

சர்ச்சை என்ன?

விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று ரசிகர் ஒருவர் கோலியை சாடியிருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுத்த விராட், இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும் கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காத இந்திய ரசிகர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டாம், அவர்கள் எந்த நாட்டு வீரரை பிடிக்கிறதோ அந்த நாட்டுக்குச் செல்லலாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபகாலமாக அசைக்க முடியாத பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். ஒரு நாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை எட்டி உலக சாதனை படைத்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஹாட்ரிக் சதங்கள் அடித்து சிம்மசொப்னமாக திகழ்ந்தார்.

இதனால், விராட் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வருகின்றனர். விராட் கோலி சதம் அடித்த போதும், அவர் 10 ஆயிரம் ரன்களை குவித்த போதும் அவரை வாழ்த்தி லட்சக்கணக்கான அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேசமயம், விராட் கோலி ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்காமல் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால், விராட் கோலிக்கு மிகப்பெரிய பலமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், விராட் கோலியின் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரீட்வீட் செய்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த ரசிகரை கடுமையாகக் கண்டித்து விராட் கோலி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. • SHARE
  Cricket Fan - Dhoni Lover - CSK Forever

  விவரம் காண

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...