VIDEO: யாருடா இவன் எங்கிருந்து பிடிச்சிங்க ; தோனி & சுரேஷ் ரெய்னாவையே திணற வைத்த நெட் பவுலர் ! 1

ஐபிஎல் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 9 நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை தான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெறியேறியது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த முறை தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக ராபின் உத்தப்பா, மோயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் ஆகியோரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது.

VIDEO: யாருடா இவன் எங்கிருந்து பிடிச்சிங்க ; தோனி & சுரேஷ் ரெய்னாவையே திணற வைத்த நெட் பவுலர் ! 2

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி வலைப்பயிற்சி பவுலராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமாகியிருக்கும் இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவராலும் கவரப்பட்டார். இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

VIDEO: யாருடா இவன் எங்கிருந்து பிடிச்சிங்க ; தோனி & சுரேஷ் ரெய்னாவையே திணற வைத்த நெட் பவுலர் ! 3

இவர் இந்த வலைப் பயிற்சியில் சிறப்பாக பந்துவீசினால் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தேர்வாகவும் வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்படுகிறது. ஆனால் தற்போது இவர் வலைப்பயிற்சியில் தனது பந்துவீச்சால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் போன்ற வீரர்களை திணற வைத்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இவரது இந்த அதிரடி பந்துவீச்சால் இந்தாண்டே அணியில் இடம் பெற்று விடுவார் போல் தோன்றுகிறது.  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *