"ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடினமாக போராடவேண்டும்" இந்திய கேப்டன் ரஹானே 1

பெங்களூருவில் நடந்த ஆப்கானிஸ்தான் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுகுறித்து, இந்திய கேப்டன் ரஹானே கருத்து தெரிவித்துள்ளார்.

"ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடினமாக போராடவேண்டும்" இந்திய கேப்டன் ரஹானே 2

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு, தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஆடியது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதில் ஷிகர் தவான், முரளி விஜய் இருவரும் சதம் விளாசினார்கள். கே எல் ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அரை சதம் விளாசினார்கள்.

அடுத்து பேட் செய்ய வந்த ஆப்கனிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா இஷாந்த் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

"ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடினமாக போராடவேண்டும்" இந்திய கேப்டன் ரஹானே 3

பாலோ ஆன் தவிர்க்க முடியாமல் அடுத்த இன்னிங்க்ஸை தொடர்ந்தது. அடுத்தும் அதே போல் சோதப்ப வெறும் 103 ரன்களையே எடுக்க முடிந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

"ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடினமாக போராடவேண்டும்" இந்திய கேப்டன் ரஹானே 4
The Chinnaswamy Stadium in Bengaluru is likely to host the one-off Test match against Afghanistan. The match would probably be held in June with the weather in the city expected to be ideal for hosting a Test match.

இதுகுறித்து ரஹானே கூறியதாவது, இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு என்பது மிகவும் பெருமைக்கு உரியது, மேலும் வெற்றி பெற்ற அணி என்றால் இன்னும் சிறப்பு. ஷிகர், முரளி விஜய், கே எல் ராகுல் மற்றும் ஹார்திக் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக நினைக்க வில்லை. எங்ககாது ஆட்டத்தில் கவனம் செலுத்தினோம். அடிப்படைகளை கவனமாக பின்பற்றினோம். ஆப்கானிஸ்தான் அணியின் சீமர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *