ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி.,

2019ம் உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் நேற்றைய போட்டியில், போட்டியின் விதிமுறைகளை மீறிய ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது ஷெஜாத் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி., தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அதே போல் ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடத்தில் இருக்கும் அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.

இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் போது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், நட்சத்திர வீரருமான முகமது ஷேஜாத், கோபத்தில் பேட்டை தூக்கி பிட்சில் வீசி எறிந்தார்.

இதனையடுத்து இது குறித்து விசாரித்த ஐ.சி.சி., போட்டி விதிமுறைகளை மீறிய ஷெஜாத் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே முகமது ஷெஜாத் சில மாதங்களுக்கு முன்பு  ஊக்க மருந்து பயன்படுத்தியதால் 1 ஆண்டு தடை பெற்ற அவர் 3 மாதங்களுக்கு முன்பு தான் அணிக்கு மீண்டும் திரும்பியது குறிப்பிடத்தக்கது. • SHARE

  விவரம் காண

  புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

  புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

  ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

  ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

  மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

  ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...