அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1
அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அம்பத்தி ராயூடுவை 2 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  நடைபெற்று வருகிறது.

அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 3

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றுள்ளனர்.

இதில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த விக்கெட் கீப்பர் அம்பத்தி ராயூடுவை, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2.20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 4

தனக்கான அடிப்படை விலையாக 50 லட்சத்தை நிர்ணயம் செய்திருந்த இவரை, அணிக்கு இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னை அணி 2.20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *