சென்னை சூப்பர் கிங்ஸில் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயூடுவுக்கு தடை விதித்தது பி.சி.சி.ஐ.,
விதிமுறைகளை மீறியதன் காரணமாக விக்கெட் கீப்பரான அம்பத்தி ராயூடு இரண்டு போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ., தடை விதித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த அந்த அணியின் விக்கெட் கீப்பர் அம்பத்தி ராயூடுவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்து கொண்டது.
JUST IN: Ambati Rayudu has been handed a two-match suspension for breaching BCCI's Code of Conduct
— Cricbuzz (@cricbuzz) January 31, 2018
இந்நிலையில் தற்போது அம்பத்தி ராயூடு விதிமுறைகளை மீறியதன் காரணமாக அம்பத்தி ராயூடு இரண்டு போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ., தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டதற்கான காரணமும், இந்த தடை சர்வதேச போட்டிகளுக்கா அல்லது உள்ளூர் போட்டிகளுக்கும் இது பொருந்துமா என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபியில் கர்நாடாக அணிக்கு எதிரான போட்டியின் போது, இரண்டு ரன்னால் ஏற்பட்ட அம்பத்தி ராயூடு சூப்பர் ஓவர் வேண்டும் என்று அம்பயர்களிடம் நீண்ட நேரம் முறையிட்டு மைதானத்திலேயே கூச்சலிட்டார். இதன் காரணமாகவே இவருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம்.