அணில் கும்ப்ளே தலை சிறந்த தலைவர்; கவுதம் கம்பீர் ஓபன் டாக்

தான் பார்த்த பயிற்சியாளர்களில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தலை சிறந்த தலைவர் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2007 மற்றும் 2017 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முறையே 75, 97 ரன்கள் என இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கெளதம் கம்பீர் பெற்றவர்.

கடந்த செவ்வாய் அன்று அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கெளதம் கம்பீர் அறிவித்தார். இந்நிலையில் 2019 உலகக் கோப்பை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இந்திய கேப்டனாக இருக்கும் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் முக்கியமானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

India head coach Anil Kumble before the ICC Champions Trophy, semi-final match at Edgbaston, Birmingham. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

“நான் விராட் கோலியின் பேட்டிங்கிற்கு ரசிகன். அவர் ரன் எடுக்கும் விதம், பந்தை எதிர்கொள்ளும் விதம் சிலிர்க்க வைக்கிறது. அவரைப் போன்ற சிறந்த வீரர் கிடைத்தது இந்திய அணிக்கு சிறப்பானது.

அவரது தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர், விராட் கோலி ஆகிய இருவரும் டெல்லியை சேர்ந்த கிர்க்கெட் வீரர்கள் ஆவர். உள்ளூர் தொடர்களில் இருவரும் இணைந்து விளையாடியுள்ளதோடு, கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணியிலும் கம்பீர் விளையாடியுள்ளார்.

மேலும் பேசிய கவுதம் காம்பீர், தான் பார்த்த பயிற்சியாளர்களில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான அனில்  கும்ப்ளே தான் தலைசிறந்த தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட கம்பீர்;

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

இந்திய அணியில் இருந்து மட்டும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்த காம்பீர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...