குழந்தையை கூட கோஹ்லி கிட்ட கொடுக்காதீங்க அனுஷ்கா; விராட் கோஹ்லியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கைக்கு வந்த கேட்ச்சை எல்லாம் கோட்டவிட்ட விராட் கோஹ்லி சமூக வலைதளங்களில் இன்றைய ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குழந்தையை கூட கோஹ்லி கிட்ட கொடுக்காதீங்க அனுஷ்கா; விராட் கோஹ்லியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல் மாயன்க் அகர்வாலும், கே.எல் ராகுலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் மாயன்க் அகர்வால் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மற்றொரு துவக்க வீரரும் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே.எல் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து மிரள வைத்தார்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 17 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கருண் நாயர் 15* ரன்களும் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 206 ரன்கள் எடுத்தது.

குழந்தையை கூட கோஹ்லி கிட்ட கொடுக்காதீங்க அனுஷ்கா; விராட் கோஹ்லியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 3

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்களான ஸ்டைன் 4 ஓவரில் 57 ரன்களும், உமேஷ் யாதவ் 3 ஓவரில் 35 ரன்களும் நவ்தீப் சைனி 4 ஓவரில் 37 ரன்களும் விட்டுகொடுத்து பஞ்சாப் அணி 200 ரன்களை கடக்க வழிவகுத்தனர்.

பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது ஒரு புறம் என்றாலும், கே.எல் ராகுல் கொடுத்த இரண்டு கேட்சையும் பீல்டிங்கில் கை தேர்ந்தவரான விராட் கோஹ்லி இரண்டு முறை கோட்டை விட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கே.எல் ராகுல் 100 ரன்களை கடந்ததற்கு விராட் கோஹ்லி கோட்டைவிட்ட இரண்டு கேட்ச்களும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், தற்பொழுது இந்த வீடியோவை ஐ.பி.எல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

குழந்தையை கூட கோஹ்லி கிட்ட கொடுக்காதீங்க அனுஷ்கா; விராட் கோஹ்லியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 4

இதனையடுத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விராட் கோஹ்லியை கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். அதில் சில ரசிகர்கள் விராட் கோஹ்லியின் இன்றைய விளையாட்டை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பார்த்திருந்தால் விரைவில் பிறக்க இருக்கும் குழந்தையை கூட கோஹ்லியிடம் கொடுக்க மாட்டார் என்ற அளவிற்கு விராட் கோஹ்லியை வச்சு செய்து வருகின்றனர்.

அதில் சில இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *