இவர்களுக்கெல்லாம் தான் என் அணியில் இடம்! ராகுல் டிராவிட் ஓபன் டாக் !! 1

இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றி வரும் ராகுல் டிராவிட் தற்போது ஷிகர் தவன் தலைமையில் இலங்கைக்கு சென்று விளையாட இருக்கும் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

தற்பொழுது ராகுல் டிராவிட் ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் கூறிய அத்தனை வார்த்தைகளும் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயமாக ஒரு வாய்ப்பு வழங்குவேன்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரை இந்திய தேர்வு குழு தேர்வு செய்யும் முன்னர் அவர் உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். உள்ளூர் தொடர்களில் குறைந்தபட்சம் 700 முதல் 800 ரன்கள் அவர் அடிக்கும் பட்சத்தில் அவருக்கு விளையாடும் வாய்ப்பை இந்திய தேர்வு குழு வழங்கும்.

இவர்களுக்கெல்லாம் தான் என் அணியில் இடம்! ராகுல் டிராவிட் ஓபன் டாக் !! 2

கனவோடு இந்திய ஏ அணிக்கு அல்லது 19 வயதுக்கு உட்பட்ட அணிகளில் அவர்கள் விளையாட வரும் போது அவர்களுக்கான வாய்ப்பை வழங்காமல் விட்டால், நிச்சயமாக மீண்டும் தங்களுடைய திறமையை முதலிலிருந்து காட்ட வேண்டும். மீண்டும் ஒரு தொடரில் 500 முதல் 800 ரன்கள் வரை குவிக்க வேண்டும்.

அந்த வலியும் வேதனையும் எனக்கு நன்றாக தெரியும்

மிக பெரிய கனவுகளோடு இந்திய அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் சென்றால்
, எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை நான் இளம் வயதில் உணர்ந்து இருக்கிறேன். எனவே முடிந்தவரை அவர்களுக்கு வாய்ப்பை நான் வழங்க முயற்சிப்பேன்.

இவர்களுக்கெல்லாம் தான் என் அணியில் இடம்! ராகுல் டிராவிட் ஓபன் டாக் !! 3
CANBERRA, AUSTRALIA – DECEMBER 02: Thangarasu Natarajan of India celebrates dismissing Marnus Labuschagne of Australia during game three of the One Day International series between Australia and India at Manuka Oval on December 02, 2020 in Canberra, Australia. (Photo by Cameron Spencer – CA/Cricket Australia via Getty Images)

அந்த வலியும் வேதனையும் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இளம் வயதில் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன். எனது தலைமையில் விளையாடப் போகும் வீரர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ளும் விஷயம் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வாய்ப்பு வழங்குவேன். அதேபோல தொடர் நடக்கும் வேளைகளில் முடிந்தவரை மாற்றங்கள் செய்து அனைத்து வீரர்களையும் நான் விளையாட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ராகுல் டிராவிட்

நீங்கள் இந்தியாவுக்கு விளையாட உங்களது இளம் வயது முதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் தெருவிலோ அல்லது பீச் மணலில் விளையாடுவதன் மூலம் உங்களின் கிரிக்கெட் மேம்படாது. நீங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய மைதானங்களில் அல்லது பிட்ச்களில் விளையாட வேண்டும்

இவர்களுக்கெல்லாம் தான் என் அணியில் இடம்! ராகுல் டிராவிட் ஓபன் டாக் !! 4

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் உங்களுடைய உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். நாங்கள் விளையாடும் காலகட்டத்தில் எங்களது உடற்பயிற்சியை மேம்படுத்த வசதி கிடையாது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களை கண்டு நாங்கள் உடல் தகுதி குறித்த சில முடிவுகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் தற்பொழுது நீங்கள் இளம் வயதிலிருந்தே உங்கள் உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்கிற அறிவுரையையும் ராகுல் டிராவிட் தற்போது இளம் வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *