ஸ்டீவ் ஸ்மித் அவ்வளவு மோசமான ஆளு கிடையாது; விளக்கம் கொடுக்கும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் !! 1

ஸ்டீவ் ஸ்மித் அவ்வளவு மோசமான ஆளு கிடையாது; விளக்கம் கொடுக்கும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

ஸ்டீவ் ஸ்மித் செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அவரது பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்து கொண்டது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

ஸ்டீவ் ஸ்மித் அவ்வளவு மோசமான ஆளு கிடையாது; விளக்கம் கொடுக்கும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் !! 2

அப்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் கண்ணாடி அணிந்து கொண்டு இடது கை ஆட்டக்காரர் விளையாடுவது போல் செய்கை செய்தார். ஸ்மித் இந்தச் செயல் இங்கிலாந்து அணியின் வீரர் ஜாக் லீச்சை கிண்டல் செய்வது போல் இருந்தது என்று பலர் விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித்தின் பயிற்சியாளர் ரையான் பியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஸ்மித் இங்கிலாந்து அணியின் ஜாக் லீச்சை கிண்டல் செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் ஸ்மித் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸை தான் கிண்டல் செய்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ், “ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கொண்டத்தின் படத்தை ஸ்மித் எனக்கு அனுப்பினார். அத்துடன் அவர் அதில் என்னை கிண்டல் செய்ததாக கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *