Cricket, India, New Zealand, Ashish Nehra, Retirement

இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நவம்பர் 1ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நியூஸிலாந்து அணியுடன் முதல் டி20 போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், வர்ணனை செய்ய வருகிறார் ஆஷிஷ் நெஹ்ரா.

நவம்பர் 16ஆம் தேதி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியின் போது முதல் முறையாக வர்ணனை பெட்டியில் உட்கார போகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. ஆஷிஷ் நெஹ்ரா டெத் ஓவரில் சிறப்பாக வீசுவார் என்று நாம் அனைவருக்குமே தெரியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மென்டர் ஆஷிஷ் நெஹ்ரா 1

ஓய்வு பெற்றதற்கு பிறகு தான் வர்ணனை செய்ய போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார் ஆஷிஷ் நெஹ்ரா. அதை போலவே இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வர்ணனை பெட்டியில் உட்கார்ந்தார் ஆஷிஷ் நெஹ்ரா.

அதன் பிறகு, தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மென்டராக மாறினார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த செய்தியை ஜாஹீர் கான் ரிசப்ஷன் அன்று அவரின் நண்பர்களுக்கு தெரிவித்ததாக தகவல் வந்தது.

இதுவரை இந்த தகவலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உறுதி படுத்தவில்லை. ஆனால், அவருக்கு நெருங்கிய நண்பர்கள் இதை உறுதி செய்துள்ளார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மென்டர் ஆஷிஷ் நெஹ்ரா 2
India’s Ashish Nehra, center, celebrates the wicket of New Zealand’s Adam Milne Colin Munro during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India,Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பயிற்சியாளராக வேலை செய்பவர்கள் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்க முடியாது என பிசிசிஐ அறிவித்தது. இதனால் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பாரத் அருண், பதவியை ராஜினாமா செய்து இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினார். இதனால், பெங்களூரு அணிக்கு பயிற்சியாளர்கள் யாரும் இல்லை, இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா இந்த பதவியில் உட்கார வாய்ப்புகள் உள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *