Cricket, India, Sri Lanka, Virat Kohli, Hardik Pandya, Ben Stokes

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் நெஹ்ரா தற்போதைய இந்திய வீரர்களின் யோ-யோ தேர்வு மதிப்பெண்ணைக் கூறியுள்ளார்.

யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்வானால் தான் இந்திய அணிக்கு விளையாட தகுதி அடைய முடியும் என தேர்வுக்குழு, கேப்டன், பயிற்சியாளர் என அனைவரும் வாய் வலிக்கும் வரை சொல்லியாகி விட்டது. வீரர்களும் இந்த தேர்விற்க்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அலுத்து விட்டனர்.

யோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா? 1

தற்போது பி.சி.சி.ஐ இந்த யோ-யோ உடல் தகுத் தேர்விற்கு தேர்ச்சி அடிப்படை மதிப்பெண் போக மற்ற அடிப்படை விதிகளை வகுக்கத் தயாராகி வருகிறது.

பெங்ளூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடமியில் இந்த உடல்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த உடல் தகுதி தேர்விற்க்காக யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என உடல் தகுதி குறைவால் கைவிடப்பட்ட வீரர்கள் அடிக்கடி யோ-யோ உடல் தகுதி தேர்விற்கு செல்கின்றனர்.யோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா? 2

யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன?

இது ஒரு ஆற்றல் மேம்பாடு தகுதி டெஸ்ட் ஆகும். அதாவது ஒரு வீரரால் எவ்வளவு வேகமாக எவ்வளவு நேரத்திற்க்கு ஓடுகிறார் என பார்க்க வைக்கப்படும் ஒரு தேர்வு ஆகும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை தொடர்ச்சியாக இரு இடைவெளிக்கு ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்க்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை அடுத்த பீப் சத்தம் வருவதற்க்குள் அடைய வேண்டும்.

யோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா? 3

இவ்வாரு வைக்கப்டும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அவர்கள் ஓடும் விரிப்பு ,அந்த ஒரு கோடுகள் அனைத்தும் நவீன அழுத்தம் மற்றும் வேகம் உள்வாங்கும் உணர்வியினால் கட்டமைக்கப்பட்டிருக்கும். இவை மற்ற கணக்கீடுகளை பார்த்துக்கொள்ளும்.

பின்னர் அதன் மூலம் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் வழங்கப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால் மதிப்பெண் 20 பெறும் ஒரு விளையாட்டு வீர்ர நல்ல உடற் தகுதியுடன் இருக்கிறார் என் அர்த்தம்.

தேர்ச்சி மதிப்பெண் மற்றும் இந்திய வீரர்களின் மதிப்பெண் :

இது குறித்து நேற்று நடந்த (நவ்.20) இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் வர்ணணை செய்து கொண்டிருந்த ஆசிஷ் நெஹ்ரா பேசினார், அவர் பேசியதாவது,

இந்த யோ-யோ தேர்வு 2001-02 ல் இந்திய அணியில் வைக்கப்பட்ட ‘ப்லிப் டெஸ்ட்’ போன்று உள்ளது. இந்திய அணியில் தேர்வாக இதன் தேர்ச்சி மதிப்பெண் 16.1 ஆக வைக்கப்பட்டுள்ளது. சீக்கிரத்தில் இதன் மதிப்பெண் 16.5 ஆக மாற்றப்படும். நியூசிலாந்து அணியின் இது 18 ஆக வைக்கப்பட்டுள்ளது.யோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா? 4

மேலும், அவர் கூறியதாவது,

நான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக எனக்கு இந்த தேர்வு சற்று எளிமையாக இருந்தது. யுவராஜ் சிங்க் மற்றும் ரெய்னா இன்னும் இதனை க்ளியர் செய்யவில்லை. 16.1 மதிப்பெண்ணுக்கு மேல் உள்ள வீரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவர். ஹர்திக் பாண்டியா இதில் 19 மதிப்பெண்ணும், மணீஷ் பாண்டே 19உம், நான் 18.5ம் எடுத்தோம். கேப்டன் விராட் கோலியின் மதிப்பெண்ணைப் பற்றி தெரியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *