தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

கேப் டௌனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சு பெரும்பங்கு வகித்தது. இரு அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு எதிரணி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.

இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நடப்பு தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

South Africa celebrate the win during day four of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 8th January 2018

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் இதிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.

Cricket – India v South Africa – First Test cricket match – Newlands Stadium, Cape Town, South Africa – January 8, 2018. India’s captain Virat Kohli looks on. REUTERS/Sumaya Hisham

இந்நிலையில், இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஸீம் பௌலிங் எனப்படும் வேகப்பந்து வீசி பயிற்சி செய்தார். இந்த விடியோ பதிவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஆஃப் ஸ்பின் மட்டுமல்லாது கேரம் பால் எனப்படும் பந்துவீச்சு வகையில் தேர்ச்சி பெற்றுள்ள அஸ்வின், சமீபகாலமாக லெக் ஸ்பின் பந்துவீச்சையும் பயிற்சி செய்து வருகிறார். இதனிடையே தற்போது ஸீம் பௌலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

  • SHARE
  Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.

  விவரம் காண

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

  எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில் எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி...

  இது வின்டேஜ் தல…. கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!!

  பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே !!

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக்...