இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் அஸ்வின் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தனது இந்த தவறை சரி செய்து வருகிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என்று கூறியுள்ளனர். 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி(நாளை) தொடங்க இருக்கிறது.
இந்த போட்டி பிங்க் நிற பந்தில் நடைபெற இருப்பதால் வீரர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு சிரமமாக இருக்கும். இருப்பினும் இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக ம் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர் அஸ்வின் பிங்க் நிற பந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஏனென்றால் அகமதாபாத் மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றவாறு இருக்கும். இதனை பயன்படுத்தி அஸ்வின் மீண்டும் அதிக விக்கெட்களை எடுக்க முயற்சி செய்வார். அஸ்வின் விக்கெட்களை எடுத்து வந்தாலும் பவுலிங்கின் போது காலை கிரீஸுக்கு வெளியே வைப்பது போல் வீசுகிறார்.
இது நோபால் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பல பவுண்டரிகளையும் அஸ்வின் விட்டுக் கொடுத்திருக்கிறார். இதை அறிந்த அஸ்வின் இதற்காக 20 முதல் 30 நிமிடம் பயிற்சி செய்திருக்கிறார். இதன்மூலம் அஸ்வின் இந்த தவறை சரி செய்துவிட்டார். தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்து வரும் அஸ்வின் நாளை நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் எவ்வாறு விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
