வீடியோ : கனா படத்தில் “ஆஃப் சைடு போடு” என்பதுபோல விஹாரிக்கு தமிழில் டிப்ஸ் கொடுத்த அஸ்வின் !
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.
இன்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விஹாரி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சிறப்பான முடிவை கொடுத்தனர். இதில் விஹாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார்.

இந்த மூன்றாவது டெஸ்டில் விஹாரி மற்றும் அஸ்வின் இவர்களது பங்கு பெருமளவில் இடம்பெற்றிருந்தது. தேனீர் இடைவேளைக்கு பின் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து போட்டியை ட்ரா செய்ய திட்டமிட்டனர். அப்போது அஸ்வின் விஹாரிக்கு களத்தில் ஒவ்வொரு ஓவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் டிப்ஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அப்போது அஸ்வின் விஹாரிக்கு தமிழில் டிப்ஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஸ்வின் விஹாரியிடம் “பொருமையா கவலைப்படாம விளையாடு மாமா. பத்து பத்து பந்தா ஆடுனா நாப்பது ஓவர்கள் ஆடலாம். ஆடு” என்றார். இதனை புரிந்துகொண்ட விஹாரி தலை அசைத்து சரி என்று கூறியுள்ளார். இவர்களது இந்த உரையாடல் ஸ்டெம்புகளில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Ashwin talking in Tamil with vihari:
— M2 (@emmcesquared) January 11, 2021
P.S. @prithinarayanan please give our love to @ashwinravi99 pic.twitter.com/x5ZU0ls4ZF
இதை பார்க்கும் போது “கனா” தமிழ் படத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைப்பெறும் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் தனது பவுலரிடம் ஆஃப் சைடு போடும் என்று கூறுவார். அதற்கு எதிரணி பேட்ஸ்மனும் ஆஃப் சைடு அடிக்க ரெடியாக இருக்கும் போது லெக் சைடு பந்தை போட்டு விக்கெட்டை வீழத்திவிடுவர். அஸ்வின் மற்றும் விஹாரி களத்தில் தமிழில் பேசியது இந்த காட்சியை நியாபகம் படுத்தியுள்ளது.