‘அஷ்வினுக்குப் பதில் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியை தேர்வு செய்யலாம்,’ என, கருத்து தெரிவித்து சர்ச்சை கிளப்பியுள்ளார் மயான்ட்டி லாங்கர்.
தென் ஆப்ரிக்க மண்ணில் நடக்க உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ‘சீனியர்’ அஷ்வின், ஜடேஜாவுக்குப் பதில், ‘சுழல்’ வீரர்களாக சகால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி மற்றும் ‘டிவி’ தொகுப்பாளினி மயான்ட்டி லாங்கர், ‘டுவிட்டரில்’ செய்தி வெளியிட்டார்.
https://twitter.com/Langer_Mayanti/status/944585557509750785
அதில்,’ நல்ல தேர்வு. ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் அஷ்வின், பயன்பட மாட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தோற்றதற்கு இவர் தான் காரணம். இவருக்குப் பதில், திறமை வாய்ந்த ஸ்டூவர்ட் பின்னியை போன்ற ‘ஆல் ரவுண்டரை’ அணியில் தேர்வு செய்யலாம்,’ என, தெரிவித்தார்.
Very good comedy at the end of 2017….Multitalent allrounder Stuart binny….hahahahhahaaaaaa…..
— Subramanian Naveen (@msubramanian14) December 27, 2017
ashwin is best spinner in the https://t.co/SAoQau9NZD are supporting your husband. Stuart binny did any thing in ipl.. tell
— Veer Pratap Shekhar (@veer_was_here_) December 27, 2017
Mam but India won 2013 Champions tropy because of ashwin
— BalajiRajesh (@Rajesh6578890) December 25, 2017
Ashwin has not been picked for the ODI matches for quite some time now…chumma y pick his name and talk rubbish abt him…you hate him so much ehh???…? And by the way BCCI knows what's good and what's not good for team India…so pls???
— A L P H A (@KEVINV1269) December 24, 2017
https://twitter.com/Pradeeppriv5631/status/944900519478177792
இதையடுத்து இந்திய ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அப்போது ஷ்யாம் சுந்தர் என்ற ரசிகர்கள் பதிலடி கொடுத்து வெ ளியிட்ட செய்தியில்,’ ஓ… கணவருக்கு ஆதரவாக பேசுகிறீர்களோ, நல்லது தான். அதேநேரம், யுவராஜ், ரெய்னாவுடன் ஒப்பிட்டால், ஸ்டூவர்ட் பின்னி நிலை தெரியுமா?,’ என, கேட்டுள்ளார்
You do realise that’s not me right? Request you not to tag me. Thanks
— Mayanti Langer Binny (@MayantiLanger_B) December 23, 2017
டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தென்னாபிரிக்கவிற்கு பயணம் செய்யவுள்ள இந்திய அணி டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளது. பின்னர் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக 6 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்கவில் ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி :
விராட் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), சிகர் தவான், அஜிங்கியா ரகானே, மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி ( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யூஜவேந்திர சகால், ஜஸ்ப்பிரிட் பும்ரா, முகமது சமி, சரதுள் தகூர், புவனேஸ்வர் குமார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் அட்டவணை
பயிற்சி ஆட்டம் – டிச.30&31, பார்ல் மைதானம், மதியம் 1.30
டெஸ்ட் தொடர்
- முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி.5, கேப்டவுன், மதியம் 1.30 மணிக்கு
- இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.13, செஞ்சூரியன்,மதியம் 2.00
- மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.24, ஜோகனஸ்பெர்க், மதியம் 1.30
ஒருநாள் தொடர்
- முதல் ஒருநாள் போட்டி – பிப்.01, டர்பன், மாலை 5.00 மணிக்கு
- இரண்டாவது ஒருநாள் போட்டி – பிப்.04,செஞ்சூரியன் மதியம் 1.30
- மூன்றாவது ஒருநாள் போட்டி – பிப்.07, கேப் டவுன், மாலை 5.00 மணிக்கு
- நாளாவது ஒருநாள் போட்டி – பிப்.10, ஜோகனஸ்பெர்க், மாலை 5.00
- ஐந்தாவது ஒருநாள் போட்டி – பிப்.13, போர்ட் எலிசபெத், மாலை 5.00
- ஆறாவது ஒருநாள் போட்டி – பிப்.16, செஞ்சூரியன், ம்ச்ஸ்ல்சி 5.00
டி20 தொடர்
- முதல் டி20 போட்டி – பிப்.18, ஜோகனஸ்பெர்க், மாலை 6.00
- இரண்டாவது டி20 போட்டி – பிப்.21, செஞஜூரியன், இரவு 9.30