“இந்திய அணிக்காக உயிரையே கொடுப்போம்” என்று விளையாடி ட்ரா செய்த இரண்டு முக்கிய வீரர்கள் ! 1

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெறு வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர்.

இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் புஜாரா அரை சதம் விளாசினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312  ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

“இந்திய அணிக்காக உயிரையே கொடுப்போம்” என்று விளையாடி ட்ரா செய்த இரண்டு முக்கிய வீரர்கள் ! 2

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய ரோகித் சர்மா 52 ரன்கள் மற்றும் கில் 31 ரன்கள் குவித்து விக்கெட்டில் இழந்தனர். இன்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில் ரகானே 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  இதன்பிறகு புஜாரா மற்றும் ரிஷப் பந்த் நிதானமாக விளையாடினர். இதில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விகாரி மற்றும் அஸ்வின் விளையாடினர்.

“இந்திய அணிக்காக உயிரையே கொடுப்போம்” என்று விளையாடி ட்ரா செய்த இரண்டு முக்கிய வீரர்கள் ! 3

தேநீர் இடைவேளைக்குப்பிறகு வெற்றி பெற முடியாது என்பதால் இந்திய வீரர்கள் விகாரி மற்றும் அஸ்வின் போட்டியை ட்ரா செய்வதற்கு முயற்சி செய்து நிதானமாக விளையாடி வந்தனர். அப்போது விகாரிக்கு தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் விகாரி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதற்குறிய முதலுதவி மட்டும் மேற்கொண்டு மீண்டும் களத்தில் விளையாடி வந்தார். இதன்பிறகு சிறப்பாக விளையாடி வந்த அஸ்வினுக்கும் பவுன்சர் பந்து ஒன்று வயிற்றுப்பகுதியில் தாக்கியது. ஆனால் அஸ்வினும் இந்த போட்டியை தொடர்ந்து விளையாடினார்.

“இந்திய அணிக்காக உயிரையே கொடுப்போம்” என்று விளையாடி ட்ரா செய்த இரண்டு முக்கிய வீரர்கள் ! 4

இவர்கள் இருவரும் தனது அணிக்காக காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். இறுதியில் இவர்களது ஜோடி போட்டியை வெற்றிகரமாக ட்ரா செய்தது. இதில் விகாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார். இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருப்பதை அறிந்து கொண்ட இந்த இரு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரகானே உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *