நேற்று நிற்க கூட முடியாத அஸ்வின் இன்று விளையாடியது ஆச்சரியம் ! அஸ்வின் மனைவி டிவிட் !
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

மிகப்பெரிய இலக்கை எதிகொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இன்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்களும் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விகாரி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து விளையாடினர். தேநீர் இடைவேளைக்கு பிறகு வெற்றி பெற முடியாது என்பதால் இந்திய வீரர்கள் விகாரி மற்றும் அஸ்வின் போட்டியை ட்ரா செய்வதற்கு முயற்சி செய்து நிதானமாக விளையாடி வந்தனர்.

அப்போது விகாரிக்கு தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் விகாரி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதற்குறிய முதலுதவி மட்டும் மேற்கொண்டு மீண்டும் களத்தில் விளையாடி வந்தார். இதன்பிறகு சிறப்பாக விளையாடி வந்த அஸ்வினுக்கும் பவுன்சர் பந்து ஒன்று வயிற்றுப்பகுதியில் தாக்கியது. ஆனால் அஸ்வினும் இந்த போட்டியை தொடர்ந்து விளையாடினார். இவர்கள் இருவரும் தனது அணிக்காக காயத்தை கூட பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர்.

இறுதியில் இவர்களது ஜோடி போட்டியை வெற்றிகரமாக ட்ரா செய்தது. இதில் விகாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார். இந்நிலையில் அஸ்வின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிரீத்தி அஸ்வின் செய்த டிவிட்டில் “ அஸ்வின் நேற்று படுக்கை அறைக்கு செல்லும் போதே முதுகு வலியால் அவதிப்பட்டார். நேற்று அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. ஷூ லேஸ் கூட அவரால் கட்ட முடியவில்லை. ஆனால் அஸ்வின் என்று விளையாடுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது” என்று டிவிட் செய்துள்ளார்.
The man went to bed last night with a terrible back tweak and in unbelievable pain. He could not stand up straight when he woke up this morning. Could not bend down to tie his shoe laces. I am amazed at what @ashwinravi99 pulled off today.
— Prithi Ashwin (@prithinarayanan) January 11, 2021