இந்த சீசனில் நான் ஜொலித்ததற்கு தோனி தான் காரணம்: அம்பட்டி ராயுடு பெருமிதம் 1

சென்ற மூறை ஐபிஎல் தொடரில் ஜொலித்ததற்கு தோனிதான் காரணம் என கூறியுள்ளார் அம்பட்டி ராயுடு.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு நாடுகளில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. கடும் ஆட்ட சுமை காரணமாக கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பட்டத்தை தக்க வைக்க களமிறங்குகிறது. துபை, அபுதாபி நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டங்கள் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் ஒளிபரப்பாகும்.

இந்த சீசனில் நான் ஜொலித்ததற்கு தோனி தான் காரணம்: அம்பட்டி ராயுடு பெருமிதம் 2

இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான 9 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் இப்போட்டிக்காக இன்று துபைக்குச் சென்றார்கள். இதர வீரர்கள் இரு நாள்கள் கழித்து துபைக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். ரோஹித் சர்மா, தோனி, அம்பட்டி ராயுடு, மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், கலீக் அஹமது ஆகிய வீரர்கள் துபைக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ராகுல், தவன், பூம்ரா, பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர் ஆகியோர் செப்டம்பர் 16 அன்று துபைக்கு கிளம்புவார்கள்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 18 அன்று ஹாங்காங்குக்கு எதிராக விளையாடவுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.20 கோடிக்கு அம்பட்டி ராயுடுவைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வரும் ராயுடு, தற்போது 283 ரன்கள் எடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ராயுடுவை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்தக் கேள்வி விராட் கோலியிடமும் நேற்று கேட்கப்பட்டது. அதற்கு கோலி அளித்த பதில்:

இந்த சீசனில் நான் ஜொலித்ததற்கு தோனி தான் காரணம்: அம்பட்டி ராயுடு பெருமிதம் 3

ராயுடு இளம் வீரர் அல்லர். அவர் 15 வருடங்களாக முக்கியமான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திறமையான வீரர். இந்தியாவுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருவராலும் கூறமுடியாது. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

32 வயது ராயுடு, இந்தியாவுக்காக 34 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 2013-ம் வருடம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ராயுடு, 2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அம்பட்டி ராயுடு, இந்தியாவுக்காக விளையாடிய கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் எடுத்த ரன்கள்:

44, 124*, 41, 62*, 41* (ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு எதிராக எடுத்தவை.)

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *