ஆசிய கோப்பை கண்டிப்பா நமக்கு தான்... இந்திய அணி கோப்பைய வெல்ல இந்த மூன்று காரணங்களே போதும் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடரானது, இலங்கையில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ஐக்கிய அரபு எமிரகத்திற்கு மாற்றப்பட்டது.

பாகிஸ்தான், இலங்கை , இந்தியா, ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் போன்ற அணிகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பிரத்தியேகமான மூன்று காரணங்கள் கிரிக்கெட் வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட மூன்று காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.

 

ஆக்ரோஷமான பேட்டிங் லைன்-அப்..ஆசிய கோப்பை கண்டிப்பா நமக்கு தான்... இந்திய அணி கோப்பைய வெல்ல இந்த மூன்று காரணங்களே போதும் !! 2

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் முதல் லோயர் ஆர்டர் பேட்டிங் வரை அனைத்துமே ஆக்ரோஷமாக உள்ளது, ரோகித் சர்மா இந்திய அணியை தலைமையேற்ற பின்பு டி20 போட்டிகளில் இந்திய அணி முன்பைவிட ஆக்ரோசமாக செயல்பட்டு வருகிறது.

துவக்க வீரர் ரோஹித் சர்மா முதல் கடைசி பேட்டி லைன் அப் வரை இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பதால் இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கபடுகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.