ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி பழைய ஆட்டத்திற்கு திரும்புவார்... சவுரவ் கங்குலி முழு நம்பிக்கை !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவார் என முன்னாள் இந்திய வீரரும், தற்போதைய பிசிசிஐ., தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி பழைய ஆட்டத்திற்கு திரும்புவார்... சவுரவ் கங்குலி முழு நம்பிக்கை !! 2

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐ.,யும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ள விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி பழைய ஆட்டத்திற்கு திரும்புவார்... சவுரவ் கங்குலி முழு நம்பிக்கை !! 3

இந்தநிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ.,யின் தற்போதைய தலைவருமான கங்குலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், “விராட் கோலியை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பயிற்சி செய்யவும், விளையாடவும் விட வேண்டும். விராட் கோலி இந்திய அணியின் மிகசிறந்த வீரர், இந்திய அணிக்காக அவர் எடுத்துள்ள ரன்களை யாரும் மறந்துவிட முடியாது. நிச்சயமாக விராட் கோலி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவார் என நம்புகிறேன். அவரால் தற்போது சடம் மட்டும் தான் அடிக்க முடியவில்லை, ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயமாக விராட் கோலி தனது பழைய பார்மிற்கு திரும்புவார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.