இந்த பையன மட்டும் எடுக்காம விட்றாதீங்க...உங்களுக்கு தான் பிரச்சனை; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

ஆசிய கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் விளையாடுவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.

இந்த பையன மட்டும் எடுக்காம விட்றாதீங்க...உங்களுக்கு தான் பிரச்சனை; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

 

இந்தியா – பாகிஸ்தான் மோதும் முக்கியமான போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் தான் அனைத்து போட்டிகளும் நடக்கின்றன. அனைத்து போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பையன மட்டும் எடுக்காம விட்றாதீங்க...உங்களுக்கு தான் பிரச்சனை; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி எதிர்கொள்ளும் மிக முக்கியமான தொடராக ஆசிய கோப்பை இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இந்த முக்கியமான தொடரில் எந்த வீரரை ஆடும் லெவனில் விளையாட வைத்தால் அணிக்கு பலமாக இருக்கும் என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இந்த பையன மட்டும் எடுக்காம விட்றாதீங்க...உங்களுக்கு தான் பிரச்சனை; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

இந்த நிலையில் இந்திய அணி தெளிவாக யோசித்து முடிவு எடுக்கும்படி இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது உயரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயரை ஆசிய கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இந்த பையன மட்டும் எடுக்காம விட்றாதீங்க...உங்களுக்கு தான் பிரச்சனை; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 5

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் விளையாடுவாரா என்று கேட்டால்..? ஆம், நிச்சயம் விளையாடுவார். ஏனென்றால் அவர் ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இவருடைய பங்கு முக்கியம் என்பதால் நிச்சயம் இவர் ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்று ஆகாஷ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.