இந்த இந்திய வீரர மாதிரி ஒருத்தர் எங்ககிட்ட இருந்தாலும் நாங்க தான் இப்ப மாஸ்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் வேதனை !! 1

பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்று அகிப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த இந்திய வீரர மாதிரி ஒருத்தர் எங்ககிட்ட இருந்தாலும் நாங்க தான் இப்ப மாஸ்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் வேதனை !! 2

ஆசிய கோப்பை தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வியடைந்ததால், இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எப்படி சமாளிக்கும் என்பதும் இந்த போட்டி மீதான அதிக எதிர்பார்பிற்கு காரணம். பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இந்த போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமே ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகிப் ஜாவித் தெரிவித்துள்ளார்.இந்த இந்திய வீரர மாதிரி ஒருத்தர் எங்ககிட்ட இருந்தாலும் நாங்க தான் இப்ப மாஸ்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் வேதனை !! 3

இதுகுறித்து அகிப் ஜாவித் தெரிவித்ததாவது,“இரண்டு அணிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் பேட்டிங்கில்தான் உள்ளது,இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். உதாரணத்திற்கு ரோஹித் சர்மாவிற்கு மட்டும் பேட்டிங் நன்றாக அமைந்து விட்டால் அவர் ஒற்றையாளாக இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவார். அதே போன்று பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமானுக்கு பேட்டிங் நன்றாக அமைத்து விட்டால் அவரும் தனது அணிக்கு வெற்றி ஒற்றையாளாக வெற்றிபெற்று கொடுத்துவிடுவார். ஆனால் மிடில் ஆர்டரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மத்தியில் வித்தியாசம் உள்ளது, குறிப்பாக ஆல்ரவுண்டர்களில் இரு அணிகளுக்கும் ஏற்றத்தாழ்வு உள்ளது, பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் இல்லாததுதான் இந்த வித்தியாசத்திற்கு காரணம் என்று அக்கிப் ஜாவித் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.