மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? புதிய ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

சதத்திற்கு மேல் சதம் அடித்து பல சாதனைகளை படைத்து இந்திய அணியின் முடிசூடா மன்னனாக வளம் வந்த விராட் கோலி, கடந்த இரண்டு வருடமாகவே மோசமான பார்மால் அவதிப்பட்டு வருகிறார். 2019இல் நடைெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வரும் விராட் கோலி தற்பொழுது மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? புதிய ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

கேப்டனாக இருப்பதால்தான் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என நினைத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி, அதற்குப்பின் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும் இவரால் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுக்க முடியவில்லை.

அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார்.. அதற்கடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார்.. என்று அவர் மீது வைத்த நம்பிக்கை எல்லாம் வீணடிக்கும் வகையில் இவருடைய பேட்டிங் மிக மோசமாக இருந்தது.

குறிப்பாக நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இதே நிலைமைதான் அரங்கேரியது.இதன் காரணமாக இவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் இந்திய அணி நீக்கியுள்ளது.மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? புதிய ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

இந்த நிலையில் இந்திய அணி, விராட் கோலி தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுக்க உதவி செய்யும் வகையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியை விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது.
அப்படி இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிர்வரும் ஆசிய கோப்பையில் விராட் கோலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதற்காகவே இந்த திட்டம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலியை ஆசிய கோப்பையில் துவக்க வீரராக களமிறக்கினால் இந்திய அணிக்கு அது சாதகமாக அமையும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி..? புதிய ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து பார்த்திவ் பட்டேல் தெரிவித்ததாவது,“விராட் கோலி திறமையான வீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் தற்பொழுது நாம் பேசுவதெல்லாம் அவருடைய பார்ம் குறித்தும், அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்தும் தான். இதற்காக தான் ஆசிய கோப்பை அவருக்கு மிக முக்கியம் என்று கருதுகிறேன், அவருக்கு மட்டுமில்லாமல் இந்திய அணியின் நலனுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். நான் எப்பொழுதும் சொல்வது பேட்டிங் காம்பினேஷன் என்பது மிக முக்கியமான ஒன்றாகும், நீங்கள் விராட் கோலியை துவக்க வீரராக விளையாட வைக்கலாம்  ஏனென்றால் கே எல் ராகுல் தற்பொழுது உடற்பகுதியோடு இல்லை, மேலும் இந்திய அணி இஷான் கிஷன், ரிஷப் பண்ட் சூரியகுமார் யாதவ் என அனைவரையும் துவக்க வீரராக களமிறக்கி பறிசோதனை செய்து விட்டது எனவே இந்த தொடரில் விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்கலாம் ”என்று பார்த்தீவ் பட்டேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.