இந்த ஒரு விசயம் போதுமே... இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கே வெற்றி; பாகிஸ்தான் வீரர் உறுதி !! 1

ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் துபாய் ஆடுகளங்கள் இந்திய அணியை விட தங்களுக்கே அதிக பரீட்சயமானது என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான சர்பராஸ் அஹமத் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஒரு விசயம் போதுமே... இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கே வெற்றி; பாகிஸ்தான் வீரர் உறுதி !! 2

ஆசிய கோப்பை தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வியடைந்ததால், இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எப்படி சமாளிக்கும் என்பதும் இந்த போட்டி மீதான அதிக எதிர்பார்பிற்கு காரணம். பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இந்த போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஒரு விசயம் போதுமே... இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கே வெற்றி; பாகிஸ்தான் வீரர் உறுதி !! 3

அந்தவகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சர்பராஸ் அஹமத், துபாய் ஆடுகளங்கள் இந்திய அணியை விட தங்களுக்கே அதிக பரீட்சயமானது என தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு விசயம் போதுமே... இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கே வெற்றி; பாகிஸ்தான் வீரர் உறுதி !! 4

இது குறித்து சர்பராஸ் அஹமத் பேசுகையில், “எந்த தொடராக இருந்தாலும் ஒவ்வொரு அணிக்கும் அந்த தொடரின் முதல் போட்டி முக்கியமானது. முதல் போட்டியில் அவர்கள் விளையாடும் விதத்தின் தாக்கம் கடைசி போட்டி வரை எதிரொலிக்கும். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் முதல் போட்டியை விளையாட உள்ளோம். இந்த போட்டி நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும், ஆனால் கடைசியாக நாங்கள் இந்திய அணியை இதே இடத்தில் தான் எதிர்கொண்டு இந்திய அணிக்கு எதிராக அபார வெற்றியும் பெற்றுள்ளோம். ஆசிய கோப்பை தொடர் நடைபெறும் துபாய் ஆடுகளங்கள் இந்திய வீரர்களை விட எங்களுக்கே அதிக பரீட்சயமானது. இந்திய வீரர்கள் துபாய் ஆடுகளங்களில் ஐபிஎல் போன்ற சில தொடர்களில் விளையாடியிருந்தாலும் அதன் மூலம் அவர்களால் துபாய் ஆடுகளங்களை பெரிதாக புரிந்து கொண்டிருக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. நாங்கள் துபாய் ஆடுகளங்களில் மிக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது, இந்த தொடரில் எங்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.