ஒரே ஓவரில் 4 விக்கெட்… தனி ஆளாக மொத்த இலங்கையையும் கதறவிட்ட முகமது சிராஜ்… வெறும் 50 ரன்களில் ஆல் அவுட்டானது இலங்கை அணி
ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இந்தியா – இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டை பும்ராஹ் முதல் ஓவரிலேயே கைப்பற்றினர்.
போட்டியின் நான்காவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஒரே ஓவரில் பதும் நிஷான்கா (2) , சமரவிக்ரமே (0), அஸலன்கா (0) மற்றும் டி சில்வா (4) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இலங்கை அணியை மொத்தமாக காலி செய்தார்.
இது தவிர மொத்தம் 7 ஓவர்களை வீசி அதில் 21 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் கைப்பற்றினார். அதே போன்று ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ராஹ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியதன் மூலம் 15.2 ஓவரில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.