JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14 வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

ஆசிய கோப்பை அட்டவணை மாற்றியமைப்பு? 1

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது.தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாள், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.லீக் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 4சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

அட்டவணை:

  1. செப்-15- இலங்கை-பங்களாதேஷ்,
  2. செப்.16- பாக்-தகுதிச்சுற்று அணி,
  3. செப்.17- இலங்கை-ஆப்கானிஸ்தான்,
  4. செப்.18- ல் இந்தியா-தகுதிச்சுற்று அணி,
  5. செப்.19-ல் இந்தியா-பாகிஸ்தான்,
  6. செப்.20- பங்களாதேஷ்-ஆப்கன் அணி,
  7. செப்.23- குரூப்ஏ வின்னர்- குரூப் ஏ ரன்னர்,
  8. செப்.23- குரூப் பி வின்னர்- குரூப் பி ரன்னர்,
  9. செப்.25- குரூப் ஏ வின்னர்- குரூப் பி வின்னர்,
  10. செப். 26- குரூப் ஏ ரன்னர்- குரூப் பி ரன்னர்,
  11. செப்.28- இறுதிப்போட்டி.

ஆசிய கோப்பை அட்டவணை மாற்றியமைப்பு? 2

இதில் செப்டம்பர் 18-ம் தேதி தகுதி சுற்று அணியோடு விளையாடும் இந்திய அணி, மறு நாள் பாகிஸ்தான் அணியுடன் மோதுவது போல அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு ரெஸ்ட்டே கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம்? இந்த அட்டவணை, முட்டாள்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



  • SHARE
  • விவரம் காண

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...

    வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !!

    வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும்...