28ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி... ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு !! 1

ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரகத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., இன்று வெளியிட்டுள்ளது.

28ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி... ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு !! 2

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் மோதும் முக்கியமான போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடக்கிறது. துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் தான் அனைத்து போட்டிகளும் நடக்கின்றன. அனைத்து போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

போட்டி அட்டவணை:

ஆகஸ்ட் 27: இலங்கை – ஆஃப்கானிஸ்தான் (க்ரூப் பி) – துபாய்
ஆகஸ்ட் 28: இந்தியா – பாகிஸ்தான் (க்ரூப் ஏ) – துபாய்
ஆகஸ்ட் 30: வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் (க்ரூப் பி) – ஷார்ஜா
ஆகஸ்ட் 31: இந்தியா – குவாலிஃபயர் (க்ரூப் ஏ) – ஷார்ஜா
செப்டம்பர் 1: இலங்கை – வங்கதேசம் (க்ரூப் பி) – துபாய்
செப்டம்பர் 2: பாகிஸ்தான் – குவாலிஃபயர் (க்ரூப் ஏ) – ஷார்ஜா

இத்துடன் லீக் சுற்று முடிகிறது. இந்த சுற்றின் முடிவில் க்ரூப் ஏ மற்றும் க்ரூப் பி ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த 4 அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும்.

செப் ழ்3: பி1 – பி2 – ஷார்ஜா
செப்டம்பர் 4: ஏ1 – ஏ1 – துபாய்
செப்டம்பர் 6: ஏ1 – பி1 – துபாய்
செப்டம்பர் 7: ஏ2 – பி2 – துபாய்
செப்டம்பர் 8: ஏ1 – பி2 – துபாய்
செப்டம்பர் 9: ஏ2 – பி1 – துபாய்
செப்டம்பர் 11: இறுதிப்போட்டி – துபாய்

Leave a comment

Your email address will not be published.