அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்..? இந்த பையனுக்கு இடம் கொடுக்காதது பெரிய தப்பு; முன்னாள் வீரர் கோவம் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக கூட இஷான் கிஷன் சேர்க்கப்படாதது ஏற்புடையது அல்ல என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்..? இந்த பையனுக்கு இடம் கொடுக்காதது பெரிய தப்பு; முன்னாள் வீரர் கோவம் !! 2

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என ஓபனாக பேசி வருகின்றனர், அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான தங்களது கருத்துக்களையும்க் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்..? இந்த பையனுக்கு இடம் கொடுக்காதது பெரிய தப்பு; முன்னாள் வீரர் கோவம் !! 3

அந்தவகையில், ஆசிய கோப்பை தொடருக்கான குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இளம் வீரரான இஷான் கிஷன் ஸ்டாண்ட் பை வீரராக கூட அணியில் சேர்க்கப்படாதது ஏன்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “கடந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன், இந்த தொடருக்கான அணியின் ஸ்டாண்ட் பை வீரராக கூட சேர்க்கப்படாதது ஏன்..? இஷான் கிஷனிற்கு இடம் கிடைக்காதது எனக்கு வருதமளிக்கிறது. கடந்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அதிகமான போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் குறைந்தபட்சம் ஸ்டாண்ட்பை வீரராகவாவது சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்..? இந்த பையனுக்கு இடம் கொடுக்காதது பெரிய தப்பு; முன்னாள் வீரர் கோவம் !! 4

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, “ரவி பிஸ்னோய் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னை பொறுத்தவரையில் ரவி பிஸ்னோய்க்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு இடம் கிடைத்திருக்க வேண்டும், அதுவே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

ஸ்டாண்ட்பை வீரர்கள்;

ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published.