ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வெறித்தனமாக காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், இஃப்திகார் அஹமத் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இதன்பின் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் (0), ரோஹித் சர்மா (12) மற்றும் சூர்யகுமார் யாதவ் (18) பெரிதாக கை கொடுக்காவிட்டாலும், விராட் கோலி பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

விராட் கோலி வெளியேறியபிறகு கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – ஜடேஜா ஜோடி பாகிஸ்தானின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு, இந்திய அணிக்கு ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியையும் பெற்று கொடுத்தது. ஜடேஜா 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நம்பிக்கையுடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 19வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் கடைசி பந்தில் ஒரு மிரட்டல் சிக்ஸருடன் மொத்தம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 5

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, கோலி போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே போல் என்னதான் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்த போட்டியில் இந்திய அணி செய்த சில தவறுகளையும் முன்னாள் வீரர்கள் பலர் சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா,
தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்ததே இவருக்காக தான்...... முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 6

இது குறித்து உத்தப்பா பேசுகையில், “தோனியை போன்று போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் போட்டியை முடித்து கொடுத்திருப்பார். ஹர்திக் பாண்டியா, தோனியை மிகவும் நேசிக்கக்கூடிய ஒருவர். தோனியிடம் இருந்து தான் ஹர்திக் பாண்டியா அதிகமான விசயங்களை கற்றுள்ளார். எனவே எந்த விசயமாக இருந்தாலும் அதை தோனியே போன்றே செய்ய வேண்டும் என ஹர்திக் பாண்டியா விரும்புவார். தோனிக்கும், ஹர்திக் பாண்டியாவிற்கும் இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. நிச்சயமாக தோனிக்காகவே ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்திருப்பார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *