அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு... மொத்தம் 26 பேர்.. நட்சத்திரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மீண்டும் இடம்! 1

அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு… மொத்தம் 26 பேர்.. நட்சத்திரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மீண்டும் இடம்!

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வருவதை அடுத்து பல நாடுகளில் மெல்ல மெல்ல கிரிக்கெட் தொடர்கள் துவங்கி வருகின்றன. முதலாவதாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் நடைபெற்று வருகிறது.

அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு... மொத்தம் 26 பேர்.. நட்சத்திரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மீண்டும் இடம்! 2

இதற்கு அடுத்ததாக செப்டம்பர் மாதம் இங்கிலாந்து செல்லவிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக ஒருமாத காலம் முன்பே ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது.

இங்கிலாந்து செல்லும் 26 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று வெளியிடப்பட்டது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் ஸ்டாய்னிஸ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் லியொன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.

அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு... மொத்தம் 26 பேர்.. நட்சத்திரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மீண்டும் இடம்! 3

கடந்த ஒரு வருட காலமாக ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் ஆடவில்லை. இவர் கடைசியாக சவுத்ஆப்பிரிக்கா தொடரில் இடம் பெற்று, பிறகு காயம் காரணமாக அதிலிருந்து விலகினார்.

அதேபோல் ஸ்டைனிஸ் மற்றும் லியோன் இருவரும் கடைசியாக  உலக கோப்பை தொடரில் பங்கேற்றனர். அதன்பிறகு தற்போது இவர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஜா, டிஆர்கி ஷாட், டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு தொடர்ந்து அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன.

இங்கிலாந்து செல்லவிருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல்:

அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு... மொத்தம் 26 பேர்.. நட்சத்திரம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மீண்டும் இடம்! 4

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் , மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் சம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *