எங்களையும் சேர்த்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா; கடுப்பான கில்கிறிஸ்ட் !! 1

எங்களையும் சேர்த்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா; கடுப்பான கில்கிறிஸ்ட்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் இந்த அசிங்கத்தால், நம்மை பார்த்து உலகமே சிரிக்குது என முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது.

எங்களையும் சேர்த்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா; கடுப்பான கில்கிறிஸ்ட் !! 2

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராப்ஃட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.

இவ்விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். சிலர் கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

எங்களையும் சேர்த்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா; கடுப்பான கில்கிறிஸ்ட் !! 3

இதற்கிடையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல் பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். புதிய பொறுப்பு கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது.

எங்களையும் சேர்த்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேடா; கடுப்பான கில்கிறிஸ்ட் !! 4

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், உலகமே ஆஸ்திரேலிய அணியை பார்த்து சிரிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டையே உலகம் தவறாக பார்க்கிறது. இந்த விவகாரம் விளையாட்டை அழிப்பதற்கு சமம். இப்படி இழிவான செயலால் ஆஸ்திரேலியாவுக்கு கெட்டப் பெயரை தேடிக் கொடுத்துள்ளனர் என கடுப்பில் திட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *