BRISBANE, AUSTRALIA - NOVEMBER 26: Mitchell Starc of Australia celebrates after taking the wicket of Chris Woakes of England during day four of the First Test Match of the 2017/18 Ashes Series between Australia and England at The Gabba on November 26, 2017 in Brisbane, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் போட்டியி களம் காண உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெயர் பெயர் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றே வெளியிட்டுள்ளது.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மார்கர்ஸ் ஹரீஸ் என்னும் இளம் வீரர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

அதே போல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச், ஷான் மார்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், டிம் பெய்ன்ன், டர்விஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன் மற்றும் ஹெசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

மார்கஸ் ஹரீஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஜோஸ் ஹசீல்வுட்.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல் ராகுல். முரளி விஜய், சட்டீஸ்வர் புஜார, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.



  • SHARE

    விவரம் காண

    புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

    புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

    ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

    ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

    மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

    ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

    வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

    வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

    வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

    வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...