LEEDS, ENGLAND - AUGUST 23: Josh Hazlewood of Australia celebrates after claiming his fifth wicket of the innings, the wicket of Jack Leach of England during Day Two of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 23, 2019 in Leeds, England. (Photo by Ryan Pierse/Getty Images)

ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டு படுமோசமான நிலையை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஜாப்ரா ஆர்சர் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர், மார்னஸ் லாபஸ்சாக்னே அரைசதம் அடித்தனர்.

திருப்பி அடித்த ஆஸ்திரேலியா!! 67 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து! 1
LEEDS, ENGLAND – AUGUST 23: Stuart Broad of England celebrates dismissing David Warner of Australia during day two of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 23, 2019 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது.

தொடக்க வீரர்களாக ஜோ பேர்ன்ஸ் (9), ஜேசன் ராய் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜோ ரூட் ஹசில்வுட் பந்தில் டக்அவுட் ஆனார். அதன்பின் இங்கிலாந்தின் விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டுபோல் சரிய ஆரம்பித்தது. மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

திருப்பி அடித்த ஆஸ்திரேலியா!! 67 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து! 2
LEEDS, ENGLAND – AUGUST 23: James Pattinson of Australia celebrates after taking the wicket of Ben Stokes of England during Day Two of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 23, 2019 in Leeds, England. (Photo by Ryan Pierse/Getty Images)

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் 3.4 ஓவர்களே மட்டுமே தாக்குப்பிடித்து 13 ரன்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட் ஐந்து விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், பேட்டின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 112 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *