பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இவர்கள் மீதான தடை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் நீக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை இவர்கள் 3 பேரும் ஒப்புக்கொண்டதையடுத்து, வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பந்தைச் சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இதில் வார்னர், ஸ்மித் இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் 8 மாதங்களைக் கழித்துவிட்டனர். பான்கிராப்டுக்கு இந்த மாதத்துடன் தடை முடிவதால், அடுத்த மாதத்தில் இருந்து அவர் கிரிக்கெட் விளையாட தகுதி பெற்றுவிடுவார்.

இந்நிலையில், முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி மிகவும் திணறுவதால், அவர்களை அணிக்குள் சேர்க்க வேண்டும், தடையை நீக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்து திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி இம்மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது.

அடுத்த மாதத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைச் சமாளிப்பது இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியால் கடினம் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் கூட்டமைப்பு அறிந்துள்ளது.

ஆதலால், தொடர் தோல்விகளை ஆஸ்திரேலிய வீரர்கள் சந்தித்து வந்தால், அவர்கள் மனரீதியாக நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதால், வலிமையான இரு பேட்ஸ்மேன்களான வார்னர், ஸ்மித்தை அணிக்குள் சேர்க்கக் கோரி அழுத்தம் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், ”ஸ்மித், வார்னர் இருவர் மீதான தடையை நீக்கக் கோரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு எங்களிடம் கோரிக்கை அளித்துள்ளது. அதற்குரிய கடிதத்தைப் பெற்றிருக்கிறோம். விரைவில் இந்தக் கடிதம் வாரியக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பதும், பரிசீலனையில் வைப்பதும் வாரியத்துக்கு உட்பட்டது. ஆனால், வீரர்கள் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

இப்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஊக்கம் அளிக்க என்ன தேவை, யார் தேவை என்பதை ஆஸ்திரேலிய வாரியம் நன்கு அறிந்துள்ளது. வீரர்களின் உண்மையான உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா அணி :

ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், க்ளென் மாக்ஸ்வெல், டார்சி ஷோர்டிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பென் மெக்டர்மட், ஆஷ்டன் அகார், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹாஸ்லேவுட், பாட் கம்மின்ஸ், நாதன் கௌல்டர்-நைல், ஆடம் ஸம்பா.

 

  • SHARE
  Cricket Fan - Dhoni Lover - CSK Forever

  விவரம் காண

  சென்னை அணி எடுக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!

  2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வகையில், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...