மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா !! 1

மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா !! 2

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி  இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா !! 3

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, முகமது சிராஜிற்கு பதிலாக விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். அதே போல் அம்பத்தி ராயூடுவிற்கு பதிலாக கேதர் ஜாதவும், குல்தீப் யாதவிற்கு பதிலாக  யுஸ்வேந்திர சாஹலும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ஆஸ்திரேலிய அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாதன் லயோனிற்கு பதிலாக ஆடம் ஜம்பாவும், பெஹண்ட்ரூஃபிற்கு பதிலாக பில்லி ஸ்டான்லேகேவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

மூன்றாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், ஜெயி ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, பில்லி ஸ்டான்லேகே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *