முதல் ஒருநாள் போட்டி; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா !! 1

முதல் ஒருநாள் போட்டி; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா !! 2

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலும், அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் வழக்கமான வீரர்களுடன் கூடுதலாக முகமது ஷமி, கலீல் அஹமது மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேதர் ஜாதவ் அணியில் இடம்பெறவில்லை, அதே வேளையில் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ர்

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அம்பத்தி ராயூடு, தோனி, தினேஷ் கார்த்தி, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சேன் மார்ஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், நாதன் லயோன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹண்ட்ரூஃப்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *