வீடியோ; மிரட்டலான கேட்ச் மூலம் கோஹ்லியை வெளியேற்றிய கவாஜா !! 1

வீடியோ; மிரட்டலான கேட்ச் மூலம் கோஹ்லியை வெளியேற்றிய கவாஜா

இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலியை அபாரமான கேட்ச்சின் மூலம் வெளியேற்றினார் உஸ்மான் கவாஜா.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இன்று துவங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

வீடியோ; மிரட்டலான கேட்ச் மூலம் கோஹ்லியை வெளியேற்றிய கவாஜா !! 2
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 05: Virat Kohli of India and Tim Paine of Australia pose with the Border–Gavaskar Trophy ahead of the Test series

100 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சியளித்தது. வழக்கம்போலவே ராகுல் வந்ததுமே 2 ரன்களில் நடையை கட்ட, முரளி விஜய்(11), கோலி(3), ரஹானே(13), ரோஹித் (37) என வரிசையாக வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.

https://twitter.com/premchoprafan/status/1070481292255350785

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, 3 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது ஒரு அற்புதமான கேட்ச். பாட் கம்மின்ஸ் வீசிய 11வது ஓவரின் மூன்றாவது பந்து, கோலியின் பேட்டில் எட்ஜாகி சென்றது. அந்த பந்தை அபாரமாக ஜம்ப் செய்து கேட்ச் பிடித்தார் கவாஜா. கவாஜா பிடித்த கேட்ச்சை பார்த்து அதிர்ச்சியான கோலி, ஒரு நல்ல கேட்ச்சின் மூலம் ரன் குவிக்க முடியாத ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

வீடியோ; மிரட்டலான கேட்ச் மூலம் கோஹ்லியை வெளியேற்றிய கவாஜா !! 3
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 06:

 

முதல் போட்டிக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல் ராகுல். முரளி விஜய், சட்டீஸ்வர் புஜார, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

மார்கஸ் ஹரீஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஜோஸ் ஹசீல்வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *