தமிழன் நடராஜனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

தமிழன் நடராஜனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 2

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் மாயன்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் மூன்று மாற்றங்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. கிரிஸ் க்ரீன் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அதே போல் ஆஸ்டன் ஆகர், சியன் அபோட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழன் நடராஜனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 3

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், சுப்மன் கில், விராட் கோஹி (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, நடராஜன்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ்< அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கேமிரான் க்ரீன், ஆஷ்டன் க்ரீன், சியான் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஸ் ஹசில்வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *