என்னை எந்த அணியும் எடுக்கமாட்டாங்கனு முன்பே தெரியும் ! - ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் வருத்தம் 1

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் இந்த ஐபிஎல் தொடரின் எந்த அணியிலும் இடம் பெறாதது குறித்து பேசியிருக்கிறார். 

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

என்னை எந்த அணியும் எடுக்கமாட்டாங்கனு முன்பே தெரியும் ! - ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் வருத்தம் 2

 இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள்.  ஆனால் ஆரோன் பின்ச் போன்ற அனுபவ வீரர்கள் பலர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் ஐபிஎல் தொடரின் எந்த அணியிலும் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுபற்றி தற்போது ஆரோன் பின்ச் பேசியிருக்கிறார்.

என்னை எந்த அணியும் எடுக்கமாட்டாங்கனு முன்பே தெரியும் ! - ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் வருத்தம் 3

ஆரோன் பின்ச் பேசுகையில் “ இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில்  என்னை எந்த அணியும் தேர்வு செய்யாது என்று எனக்கு முன்பே தெரியும். சில ஆண்டுகளாக நான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறேன். இதை நான் எதிர்பார்த்தேன். இதை எனது குடும்பத்துடன் இருப்பதற்கான நேரமாக கருதுகிறேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தவறுகளை சரி செய்து எனது திறமையை வெளிப்படுத்துவேன்” என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.

என்னை எந்த அணியும் எடுக்கமாட்டாங்கனு முன்பே தெரியும் ! - ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் வருத்தம் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *