ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியாக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முதலாக ஆயிரம் வெற்றிகளை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து ஆஸ்திரேலிய அணி தற்போது வரை ஆயிரம் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள அணிகளின் விவரம்

  1. ஆஸ்திரேலியா 1000 வெற்றிகள்
  2. இங்கிலாந்து 774 வெற்றிகள்
  3. இந்தியா 711 வெற்றிகள்
  4. பாகிஸ்தான் 702 வெற்றிகள்
  5. வெஸ்ட் இண்டீஸ் 608 வெற்றிகள்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. அந்த அணியில், ஹேண்ட்கோம்ப் 73, கவாஜா 59, மார்ஸ் 54 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப், புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

289 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான், ராயுடு டக் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் ஏமாற்றினார். இதனையடுத்து, ரோகித் சர்மாவும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். தோனி நிதானமாக விளையாட, ரோகித் சற்றே அடித்து விளையாடி ரன்களை சேர்த்தார். இந்திய அணி 25.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

93 பந்தில் அரைசதம் அடித்த தோனி, 51 ரன்னில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 110 பந்தில் சதம் விளாசினார். 42.3 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. வெற்றி பெற இன்னும் 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. சதம் அடித்த உடன் ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமான விளாசினார். இருப்பினும் 129 பந்தில் 133 ரன் அவுட் ஆனார். இந்திய அணி வெற்றி பெற இறுதிவரை போராடியது. இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மாவுக்கு இது 22வது சதம் ஆகும். இந்திய அணியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சர்வதேச அளவில் 12வது இடத்தில் உள்ளார். சச்சின் 49, விராட் கோலி 38 சதங்களுடன் முன்னிலையில் உள்ளனர்.வ



  • SHARE

    விவரம் காண

    எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

    இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

    இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...

    வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்!

    இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....

    நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் !!

    நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...

    1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி !!

    1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...