ஜாம்பவான் சச்சின் டெண்டுலரை பின்னுக்கு தள்ளி கிரிக்கெட் வரலாற்றின் பெரிய உச்சத்தை தொட்ட பாபர் அசாம் !! 1

ஆல் டைம் சிறந்த ODI பேட்ஸ்மேன் என்ற ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத்தள்ளி 15வது இடத்தில் முன்னேறியுள்ள பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம்.

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் t20 போட்டிகளை உள்ளடக்கிய தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியிடம் 1-0 என தோல்வியை தழுவி மண்ணை கவ்வியது.

ஜாம்பவான் சச்சின் டெண்டுலரை பின்னுக்கு தள்ளி கிரிக்கெட் வரலாற்றின் பெரிய உச்சத்தை தொட்ட பாபர் அசாம் !! 2

பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி 2-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி தன்னுடைய இழந்த கௌரவத்தை மீட்டெடுத்தது, ஆனால் அதே கௌரவத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி காட்ட முடியவில்லை. டி20 தொடரில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியிடம் இரண்டு தொடர்களில் தோல்வியை தழுவியது மிகப்பெரிய அவமானம் என்று அந்த நாட்டின் முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுலரை பின்னுக்கு தள்ளி கிரிக்கெட் வரலாற்றின் பெரிய உச்சத்தை தொட்ட பாபர் அசாம் !! 3

சாதனை படைத்த பாபர் அசாம்

இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பேட்டிங்கில் அபார வளர்ச்சி அடைந்துவரும் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பாபர் அசாம் ஆல்டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ஒரு படி முன்னேறி உள்ளார்.

https://twitter.com/SajSadiqCricket/status/1511752006700085261?s=20&t=h5-7YfSWGJfE6HP7F0EUIQ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாபர் அசாம்(57,114,105) 2 சதம் ஒரு அரை சதம் உட்பட 276 ரன்கள் அடித்து அந்தத் தொடரின் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்று அசத்தியுள்ளார், மேலும் ஆல்டைம் சிறந்த ஒருநாள் தொடருக்கான பேட்ஸ்மேன் என்ற வரிசையில் 891 புள்ளி பெற்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (887)பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்துள்ளார்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமை உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *