நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 1

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கத்தியதால் பெர்ஸ்டோவ்-க்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, பேர்ஸ்டோவ் 18 பந்தில் 47 ரன்கள் அடித்து நீசம் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கோபமாக கத்தினார். இது ஐசிசி-யின் நன்னடத்தை விதியை மீறிய செயலாகும் என தெரிவித்த ஐசிசி, சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியை வழங்கியது. ஏற்கனவே பேர்ஸ்டோவ் இதுபோன்று கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஒரு புள்ளி வாங்கியுள்ளார்.

இரண்டு வருட காலத்திற்குள் நான்கு புள்ளிகள் பெற்றால் தானாகவே, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடைவிதிக்கப்படும்.

நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 2

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி போன்ற மற்றொரு பரபரப்பான ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடந்தது. ஆனால், அதிர்ஷ்டம் இல்லாத நியூஸிலாந்து அணி இந்த முறையும் தோல்வி அடைந்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. 147 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து போட்டியின் முடிவை அறிய சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து சார்பில் பேர்ஸ்டோ, மோர்கன் களமிறங்கினார்கள். நியூஸிலாந்து தரப்பில் சவுதி பந்து வீசினார். பேர்ஸ்டோ, மோர்கன் இருவரும் தலா ஒரு சிக்ஸர் உள்ளிட்ட மொத்தம் 17 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து நியூஸிலாந்து அணி 18 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூஸிலாந்து தரப்பில் ஷீபெர்ட், கப்தில் களமிறங்கினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் பந்து வீசினார்.

நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 3

கட்டுக்கோப்பாக ஜோர்டன் பந்து வீச முதல் பந்தில் ஷீபர்ட் 2 ரன்கள் எடுத்தார். 2-வது பந்து வைடாகச் சென்றது. 2-வது பந்தில் ஷீபெர்ட் பவுண்டரி அடித்து 3-வது பந்தை கோட்டை விட்டார். 4-வது பந்தில் ஷீபர்ட் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு நியூஸிலாந்து தள்ளப்பட்டது. 5-வது பந்தில் கப்தில் ஒரு ரன்னும், கடைசிப் பந்தை கிராண்ட்ஹோம் தவறவிட்டார். இதனால், ஒருவிக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் மட்டுமே சேர்த்து நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பைப் போட்டியில் இதேபோன்று சூப்பர் ஓவர் சென்று சூப்பர் ஓவரிலும் ஆட்டம் டை ஆனதால், பவுண்டரி கணக்கீ்ட்டை வைத்து கோப்பை இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் சூப்பர் ஓவர்வரை வந்தும் நியூஸிலாந்து அணி கோப்பையைத் தவறவிட்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தொடர் முழுவதும் நியூஸிலாந்து அணியில் பேட்டிங்கில் சொதப்பிய கப்தில், முன்ரோ இந்த முறை ருத்ரதாண்டவம் ஆடிவிட்டனர்.

நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 4

தொடக்கத்தில் இருந்து கப்திலும், முன்ரோவும் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார்கள். சாம்கரன் வீசிய முதல் ஓவரில் கப்தில் ஒரு பவுண்டரியும், முன்ரோ பவுண்டரி, சிக்ஸர் விளாசி ரன் ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

டாம் கரன் வீசிய 2-வது ஓவரில் கப்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். ஜோர்டான் வீசிய 3-வது ஓவிரில் கப்தில் ஒரு பவுண்டரி சிக்ஸரும் பறக்கவிட, முன்ரோ ஒரு சிக்ஸர் அடித்தார். 2.4 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 50 ரன்களை எட்டியது.

ரஷித் வீசிய 4-வது ஓவரில் கப்தில் தொடர்ந்து இரு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். முகமது வீசிய 5-வது ஓவரில் முன்ரோ சிக்ஸர், பவுண்டரி விளாசினார்.

ரஷித் வீசிய 6-வது ஓவரில் மிட் விக்கெட்டில் பான்டனிடம் கேட்ச் கொடுத்து கப்தில் 20 பந்துகளி்ல 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். நியூஸிலாந்து அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

அடுத்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் நிலைக்காமல் 6 ரன்னில் முகமது பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த ஷீபர்ட், முன்ரோவுடன் சேர்ந்து அதிரடியில் இறங்கினார். ரஷித் வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களை ஷீபர்ட் விளாசினார். அதிரடியாக ஆடிய முன்ரோ 21 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கும். அந்த ஓவரில் ஷீபர்ட் 2 சிக்ஸர்கள், பவுண்டரியை அடுத்தடுத்து பறக்கவிட்டு ரன் ரேட்டை உயர்த்தினார்.

நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 5

டாம் கரன் வீசிய 11-வது ஓவரில் ஷீபர்ட்ஒரு சிக்ஸர் அடித்தநிலையில் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஷீபர்ட் போல்டாகினார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த டெய்லர் 3 ரன் சேர்த்து கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார்.

கடைசி 26 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது.

147 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்தி இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர் பான்டன்(7) ரன்னிலும், வின்ஸ் ஒரு ரன்னிலும் விரைவாக ஆட்டமிழந்தார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த வின்ஸ் இந்த முறை ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

பேர்ஸ்டோவுக்கு துணையாக சிறிது நேரம் ஆடிய பேர்ஸ்டோ நிலைக்கவில்லை. 17 ரன்னில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அடுத்து சாம் கரன் வந்து பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். பேர்ஸ்டோ தனது வழக்கமான அதிரடியில் இறங்கி ஸ்கோரை உயர்த்தினார்.

நடுவரை முறைத்து அடுத்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பை குறைத்துக்கொண்ட வீரர்! 6

அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 18 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து நீசம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடக்கம். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர்.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்தவுடன் சான்ட்னர் வீசிய அடுத்த ஓவரில் சாம்கரன் 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கிரிகோரி 6 சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் பில்லிங்ஸ், டாம் கரன் இருந்தார்கள். நீசம் பந்து வீசினார். முதல் இரு பந்துகளில் 2 ரன்களும்,அடுத்த பந்தில் ஒரு ரன்னும் பில்லிங்ஸ் எடுத்தார். 3-வது பந்தில் டாம் கரன் 12 ரன்னில் கிராம்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோர்டன் அதிரடியாக ஒரு சிக்ஸர், 2 ரன்கள், பவுண்டரி அடிக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

இங்கிலாந்து அணியும் 11 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து தரப்பில் சான்ட்னர், போல்ட், சவுதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *